Pathayathirai.org -  Thaipoosa Walk

Non-Profit 501(c)(3) Organization. Tax Id: 82-4014726

Pathayathirai.org - Thaipoosa Walk


New VelMont Pathigam
https://youtu.be/t3Uek3xleFo



Ganesha Songs
Murugan Songs


http://www.bhajanai.com

https://www.sivaya.org

பாடல்; வேல்மாண்ட் வேலன் பதிகம்.
எழுதியவர்: மீ.மணிகண்டன்
--------------------------------------------------------------
வேல்மாண்ட்டில் நின்றருளும் வேலன் அவன்தான்
வேண்டிடுவோர் மனங்குளிர ஆசி புரிந்தான்
மால்மருகன் அவனழகுக் காட்சி யினைத்தான்
மனமுருகிப் பாடிவிட்டால் மகிழ்ச்சி நலம்தான்; 1

மலையேறி நடந்துவந்தால் மன்னன் இருக்கிறான்
மயிலோடு வேல்பிடித்து ஆட்சி செய்கிறான்
அலையலையாய் அடியவரைப் பார்த்து மகிழ்கிறான்
அண்டியவர் வாழ்வுயர ஏற்றம் தருகிறான்; 2

தைப்பூச நாளினிலே காவடி சுமப்போம்
தமிழாலே பாடியவன் திருவடி தொழுவோம்
எப்பொழுதும் வேலனையே சிந்தையில் வைப்போம்
எழிலான சரவணபவ மந்திரம் சொல்வோம்; 3

சுப்பையா என்றழைத்தால் சோதனை விலகும்
சண்முகத்தை உச்சரித்தால் சாதனை பெருகும்
முப்பொழுதும் அவன்பெயரே தாரகம் ஆகும்
முருகிருக்கும் கோயிலெங்கள் தாயகம் ஆகும்; 4

பழனிமலை மேலிருக்கும் பாலன் அவன்தான்
பறந்துவரும் மயிலேறி உலகை அளந்தான்
அழகான மலையிதென்றே அதிசயம் கொண்டான்
அதனாலே வேல்மாண்ட்டில் கோயிலும் கண்டான்; 5

கழனிவயல் இயற்கையோடு பேசிக் களிப்பான்
கடல்தாண்டும் பக்தருக்கும் காவல் இருப்பான்
தொழில்தேடி வருபவர்க்குத் தோழன் அவன்தான்
தொன்றுதொட்டே உறவதனால் தோள்கள் கொடுப்பான்; 6

பூவெடுத்து மாலைகட்டிப் பூசைகள் செய்வோம்
பூலோகம் முழுவதிலும் கோயில் அமைப்போம்
கூவிவரும் குயிலழைத்துப் பாடிடக் கேட்போம்
கோலமயில் ஆடிடத்தான் கும்பிட்டு மகிழ்வோம்; 7

சேவற்கொடி செந்திலுக்கு விரதம் இருப்போம்
தேன்தினைமா பழமெடுத்து அமுது படைப்போம்
பாவடிகள் தான்படித்து வேண்டுதல் சொல்வோம்
பார்த்திடுவான் அருள்சுரப்பான் வேறென்ன வேண்டும்; 8

கற்பூரம் கமழ்தூபம் கார்த்திகை பாலா
காட்டியுனை வழிபடுவோம் சற்குரு நாதா
மேற்கெழுந்த சூரியனே மின்னிடும் வேலா
மேகமழை போலிறங்கி அருள்தர வாவா; 9

அற்புதந்தான் உன்னருளால் கூடுது நன்மை
அனுதினமும் வாழ்க்கைவளம் பெருகுது உண்மை
பொற்பதங்கள் பணிந்துவிட்டோம் புகலென உம்மை
போற்றிபோற்றி வேல்முருகா காத்திடு எம்மை; 10

Keywords: Thaipoosam or Thaipusam or Thaipusa Walk, pathyathirai, padayatra from San Ramon Central park